முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் பிடிஆர்

by Staff / 15-07-2023 02:00:47pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் பிடிஆர்

கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்காக மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுத்த பின்னர், மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று, கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.

 

Tags :

Share via