கிட்னி விற்பனை.. திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனையில் தொடர்புடைய இடைத்தரகரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூலி தொழிலாளிகளை மூளை சலவை செய்து, கிட்னி விற்பனை செய்ய வைத்த திமுகவை சேர்ந்த ஆனந்தன் தலைமறைவாக உள்ளார். ஆனந்தனை பிடிக்க திருச்செங்கோடு டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி ஆனந்தன் விற்பனை செய்துள்ளார்.
Tags :



















