வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
மறைந்த முன்னாள் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேலின் 182 அடி உயர சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதனையொட்டி நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பிரதமரின் வருகையையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நாள் நமது சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் அதிகரிக்கட்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Tags :



















