முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்

by Staff / 31-10-2023 12:18:09pm
முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.400 கோடி கேட்டு மர்ம நபர் பெல்ஜியத்தில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக கருதப்படும் முகேஷ் அம்பானிக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முன்னதாக, ரூ.20 கோடி கேட்டும், பின்னர் கடந்த 28ஆம் தேதி ரூ.200 கோடி கேட்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது 400 கோடி கேட்டு பெல்ஜியத்தில் இருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இம்மிரட்டலால் மும்பை அல்டமண்ட் ரோட்டில் உள்ள அம்பானியின் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via