ரஷ்யாவை துரத்தும் கொரோனா.

by Admin / 19-11-2021 03:16:43pm
ரஷ்யாவை துரத்தும் கொரோனா.

 

ரஷ்யாவை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்தது

   
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 37 ஆயிரத்து 370-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,374 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,251 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.60 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
 10.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக  சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via