தவெக தலைவர் விஜயை சந்திக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
விஜய் தற்போது பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் விஜயைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக ஏற்கனவே நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த அதிரடி நகர்வு தவெக ஆட்சியமைப்பதை உறுதி செய்யும் எனத் தெரிகிறது. இது தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
Tags :



















