தடுப்பூசி போட்டுகொண்டதற்கு ஆதாரம் கேட்கிறது சவுதி அரசு!

by Editor / 20-05-2021 01:28:55pm
தடுப்பூசி போட்டுகொண்டதற்கு ஆதாரம்  கேட்கிறது சவுதி அரசு!

சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகம் தரப்பில், 'வரும் ஆகஸ்ட் மாதம் முதல் குடியிருப்பு வாசிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொற்றைக் குறைக்கவும் ஏப்ரல் மாதம் முதலே கரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சவுதியில் இதுவரை 1.1 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

Tags :

Share via