ஈரோடு வாக்குச்சாவடியில் பரபரப்பு

by Staff / 27-02-2023 04:39:31pm
ஈரோடு வாக்குச்சாவடியில் பரபரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு போதுமான குடிநீர், சாமியான பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு செலுத்த சக்கர நாற்காலி வசதி இல்லை என கூறி எஸ்டிபிஐ கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குபதிவு காலதாமதம் செய்யாமல் வாக்காளர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் பின்னர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை தடுக்கும் வகையில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். இதையடுத்து வாக்காளர்களுக்கு போதுமான அடிப்படை மேற்கொள்ளப்பட்டு வாக்குபதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo