சங்கனாச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கப்பிள் ஷேரிங்(Couple Sharing) அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் வேறு ஆண்களிடம் தன்னை பாலியல் ரீதியாக பகிருவதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாக தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.கோட்டயம் அருகிலுள்ள கருகச்சால் என்ற பகுதியில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கேரள மாநிலத்திலுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சமூக வலைத்தளங்கள் இணைப்பு மூலம் அனைவரையும் இணைத்து குரூப் ஒன்றை உருவாக்கி ‘வைஃப் ஸ்வாப்பிங்’ என்ற பெயரில் பல கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவது தெரியவந்தது. கப்பிள் ஷேரிங்(Couple Sharing) என்ற பெயரில் இவர்கள் சமூக வலைத்தளங்களில் குழுவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.` `சீக்கிரட் சாட்’ மூலம் இவர்கள் தொடர்புகொண்டு மனைவிகளை மாற்றிக்கொண்டு பாலியல் உறவில் ஈடுபடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிலர் இதற்காக பணம் கொடுக்கும் நிலையும் உள்ளதாகவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் அந்த மாநிலத்தில் உயர்ந்த பொறுப்பிலுள்ள வழக்கறிஞர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்டோரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முக்கிய புள்ளிகளும் இந்த குழுவில் உள்ளதாக தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது,
Tags :