கொரோனோ தொற்று பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

by Editor / 10-01-2022 10:20:15pm
கொரோனோ தொற்று பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் கொரோனோ தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 14ம் தேதி பொங்கல் முதல் 18ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.  ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 ஏற்கனவே முழு முடக்க காலத்தில் தடைசெய்த மற்றும் அனுமதித்த இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.  ​பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் செல்வோர் நலனை கருத்தில் கொண்டு 75% பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
​தமிழகத்தில் கொரோனோ கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை தொடரும்.

 

Tags :

Share via

More stories

Logo