மருத்துவக் கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்க: முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம்

by Editor / 02-05-2022 06:49:35pm
 மருத்துவக் கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்க: முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம்

மதுரை மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைப்படியே 'வைட் கோட் செர்மனி', சரக்கா சபதம் நிகழ்வு நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags :

Share via

More stories