பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு .-தமிழிசை சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

by Editor / 19-02-2023 10:29:39am
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு .-தமிழிசை சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர்.அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்தது,கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவி செய்தவர்,
1985-ம் ஆண்டு கன்னிராசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார்.

சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல்.

சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் இருந்து மயில்சாமி அண்ணனை தெரியும். ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. நிறைய பேருக்கு அண்ணன் உதவி செஞ்சிருக்காரு. மிகப்பெரிய இழப்பு- நடிகர் யோகி பாபு உருக்கம்.

திரைத்துறைக்கு மட்டுமல்லாது அவரோடு நெருங்கி பழகிய எங்களுக்கும் இது மிகப்பெரிய இழப்பு; ரொம்ப வெள்ளை மனுசுக்காரர். தீவிரமான எம்.ஜி.ஆர். பக்தன். என்ன சொல்றதுனு தெரில. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்- நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்.

மழை, புயல் வந்தபோதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண கிளம்பிடுவாரு. பணம் செலவாகுதுனு சொன்னா, 'என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போறோம்'னு கேப்பாரு. திரைத்துறையில் நடிகர்கள் தொடர்ந்து இறந்துட்டே இருக்காங்க. வேதனையா இருக்கு.- நடிகர் மனோ பாலா உருக்கம்.

அண்ணனோட மறைவை ஜீரணிக்கவே முடியல- மயில்சாமி மறைவுக்கு -சூரி இரங்கல்.

பசி என்று வருபவர்களுக்கு பாக்கெட்டில் இருப்பதை கொடுத்துவிடுவார் மயில்சாமி - நடிகர் வையாபுரி உருக்கம்.

 

Tags :

Share via