பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார். இவருக்கு வயது 58. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார். உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த அவர், மைனே பியார் கியா, பாசிகர், பாம்பே டு கோவாவின் ரீமேக் மற்றும் ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாய்யா போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :



















