மல்லிகை பூ இன்று 4000 ரூபாய்க்கு விற்பனை

by Editor / 13-01-2023 04:03:52pm
 மல்லிகை பூ இன்று 4000 ரூபாய்க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு வென  உயர்ந்துள்ளது: 2000 ரூபாய்க்கு  விற்பனையான  மல்லிகை பூ இன்று 4000 ரூபாய்க்கு விற்பனை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே  ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

நாளொன்றுக்கு 10 டன்னுக்கும் மேலாக  மல்லிகை பூ இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதிக பனி பொழிவின் காரணமாக பூக்கள் வரத்து மிகவும் குறைந்தது. இதனால் பூக்கள்  விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.   

கடந்த வாரம்  2000  ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று 3500 முதல் 4000 ரூபாய் வரை விற்பனையாக்கி வருகின்றன.
1200 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த  பிச்சி பூ ரூ.2000 க்கும்,   
1000 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த முல்லை பூ ரூ.2500 முதல் 2800க்கும், 
சம்பங்கி ரூ.200க்கும், பட்டன்ரோஸ் ரூ.300க்கும்  செவ்வந்தி ரூ.200, விற்பனையாகி வருகின்றன.

இதுகுறித்து பூ வியாபாரி  சங்க தலைவர் பிரபாகர் கூறும் போது அதிக பணிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதே நேரம் தேவை அதிகம் உள்ளதால் பூக்களின் விலை  மிகவும் உயர்ந்துள்ளது. பனிக்காலம் முடிந்து பொங்கலுக்கு பின்னர் பூக்கள் விலை சராசரியாக இருக்கும் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via