10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கு மானியம்

by Staff / 20-02-2024 12:44:07pm
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கு மானியம்

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

 

Tags :

Share via