எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் கைது

by Editor / 02-07-2021 09:30:40am
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் கைது

தமிழகத்தில் ஏடிஎம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹரியாணாவில் கொள்ளைக் கும்பலின் தலைவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி ஒரு கும்பல், சென்னையில் ரூ.45 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கும்பலைக் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை ஹரியாணாவைச் சோந்த 3 பேரைக் கைது செய்தது.

கொள்ளைக் கும்பலின் தலைவன்: ஹரியாணாவில் பதுங்கியிருந்த அந்த கும்பலின் ஒரு தலைவனான செளகத் அலியை வியாழக்கிழமை இரவு கைது செய்ததாக சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

செளகத் அலியை முதல் கட்ட விசாரணைக்கு பின்னா், சென்னைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறினா். இந்த வழக்கில் இதுவரை 4 போ கைது செய்யப்பட்டுள்ளனா். 

 

Tags :

Share via

More stories

Logo