மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்

by Editor / 03-07-2021 09:48:49am
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்

கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப் போவதாகவும் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றது. தற்போது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 51 அமைச்சர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 81 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புதுமுகங்கள். இளைஞர்களுக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவார் என்றும், அவர் பீகார் அல்லது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலை ஏற்கனவே சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் புதிய அமைச்சரவையில் தமிழகம் உள்பட இன்னும் ஒருசில மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பிரபலத்திற்கு அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via

More stories