வாசுதேவநல்லூர் அருகே மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின் மாற்றியில் பயங்கர தீ விபத்து.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின் மாற்றியில் பயங்கர தீ விபத்துஏற்பட்டதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள நிலையில் தற்போது வரை ஒரே ஓரு வாகனம் மட்டும் வந்துள்ளதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் 2நாட்கள் மின்விநியோகம் வழங்குவதில் சிக்கல் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தகவல் ஒரு வாகனம் மட்டுமே தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக தீயை அணைப்பதில் பெரும் திணறல் ஏற்பட்டுள்ளது மேலும் போதிய அளவு தண்ணீர் இல்லாத சூழலும் அங்கு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ளார்கள் குற்றம் சாட்டுகின்றனர் கூடுதல் வாகனத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : வாசுதேவநல்லூர் அருகே மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின் மாற்றியில் பயங்கர தீ விபத்து.