கூகுளில் 20 ஆண்டுகள்இன்ஸ்டாகிராம் கணக்கு வாயிலாக சுந்தர் பிச்சை கொண்டாட்டம்.
தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒருவர் சேர்ந்தார்போன்று சில வருடங்கள் பணியாற்றுவது சவாலாக மாறிவரும் காலத்தில், தமிழகத்தின் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இவர் 2004 ஏப்ரல் 26 தினத்தன்று கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தற்போதைய தலைமை பதவிக்கு 2015-ல் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான லாரி பேஜால் நியமிக்கப்பட்டார். கூகுளில் 20 ஆண்டுகள் கழித்திருப்பதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கு வாயிலாக சுந்தர் பிச்சை கொண்டாடி இருக்கிறார்.
Tags : சுந்தர் பிச்சை கொண்டாட்டம்.