அமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்யுங்கள் - திமுகவுக்கு சிக்கல்

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயிகளை வஞ்சிக்கும் உள்நோக்குடன் செயல்பட்ட அமைச்சர் எ.வ.வேலுவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து நவம்பர் 21, 29ஆம் தேதிகளில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார்.
Tags :