மன்சூர் அலிகானுக்கு நடிகை மாளவிகா மோகனன் கண்டனம்
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை மாளவிகா மோகனன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது. ஆனால், அதையும் மீறி என்ன தைரியத்தில் இதையெல்லாம் எந்தவித யோசனையும் இல்லாமல் பொதுவெளியில் பேசுகிறார். கொஞ்சமாவது அவமானப்படுங்கள் மன்சூர் அலிகான். என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட கேவலம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பாலியல் பலாத்கார காட்சி குறித்து மன்சூர் பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Tags :