அமைச்சர் கே .என் .நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

by Admin / 20-02-2026 11:09:14am
அமைச்சர் கே .என் .நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே .என் .நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024- 25 காலகட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 பணியிடங்களை நிரப்புவதில் சுமார் 888 ஆயிரம் கோடி முதல் 1,020 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை கலந்த 2025 அக்டோபர் 27 மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தது. இந்த முறைகேடு குறித்து வழக்கு பதிவு செய்யக்கூடிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் இன்பத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் .இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி மஹிந்தர மோகன் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

Tags :

Share via
Logo