வால்பாறை பகுதியில் வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு.

by Editor / 05-05-2023 11:22:06pm
வால்பாறை பகுதியில்  வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழ் நாடு வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டர். வால்பாறை வளர்ச்சி பணிகள் பார்வையிட்டும், மற்றும் வால்பாறையை அடுத்த சிறுக்குன்றா பகுதியில்  கரடி ,சிறுத்தை  இருவரை  தாக்கி ஸ்டான்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். சிகிச்சை பெரும் இருவரின் மருத்துவ சிகிச்சைக்கும் முதல் கட்டமாக தலா 5ஆயிரம் வழங்கினார். மேலும் வன துறை மூலம் கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் வால்பாறை பகுதியில் நடை பெரும் திட்ட பணிகள் மற்றும் முடிந்த பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி,, வன அலுவலர், வன சரகர், திமுக  மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனார்.

 

Tags :

Share via

More stories