டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

by Staff / 19-11-2023 12:54:44pm
டெல்லி செல்கிறார்  ஆளுநர் ஆர்.என்.ரவி

திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5.15 மணிக்கு டெல்லி செல்கிறார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via