அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தாய், குழந்தை பலி

பெங்களூருவில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் 9 மாத குழந்தை தீயில் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு சென்று சாலையை கடக்க முயன்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சௌந்தர்யா (23) மற்றும் அவரது மகள் சுவிக்ஷா (9 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்த நிலையில், குழந்தையும், தாயும் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மின் வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
Tags :