கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நேற்று சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.சூர பத்மநாதனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது...
இதை முன்னிட்டு மாலையில் ,,கிழ வாசலில் வெளி பிரகாரத்தில் மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி எழுந்தருளினார்.. அதனைத் தொடர்ந்து பானுகோபன், யானை முகன், சிங்கமுகன், தர்ம கோபன், சூரபத்மன் ஆகியோரை, கழுகாசலமூர்த்தி வதம் செய்து சூரசம்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
Tags :