குமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் பாதயாத்திரை ராகுல்காந்தி தலைமையில் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டம்

by Editor / 15-07-2022 01:36:34pm
குமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் பாதயாத்திரை ராகுல்காந்தி தலைமையில் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டம்

பரதத்தை இணைப்போம்  என்ற பெயரில் 148 நாட்களில் 3500 கிலோமீட்டர் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாளில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமை காண பாதயாத்திரை தேதி மாற்றப்பட்டு முன்கூட்டியே நடைபெறலாம் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது. அதை அடுத்து ராகுலின் தலைமையில் பாதயாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via