இந்திய மகளிர் 19 வயதுக்கு உட்பட்ட t20 கிரிக்கெட் போட்டி-உலக கோப்பையை கைப்பற்றியது.-

யு 19 மகளிர் டி20 உலக கோப்பை இறுதி போட்டி இந்திய மகளிர் கிரிக்கட் அணியும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியும் மலேசியா கோலாலம்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. தென்னாப்பிரிக்க மகளிர் அணி 82 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எடுத்து ஆட வந்த இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது. இந்திய மகளிர் 19 வயதுக்கு உட்பட்ட t20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை யாரும் சாதிக்காத ஒரு சாதனையை ஜமுனாபோத்தா , பி திரிசா ஆட்டக் களத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இவர்களுடைய இந்த ஆட்டம் கிரிக்கெட் இளம் தலைமுறை நேரடி நம்பிக்கையை விதைத்து உள்ளது.

Tags :