3வது நாளாக குறைந்த தங்கம் விலை- தொடர்ந்துசரிவு.

by Editor / 05-04-2025 10:06:54am
 3வது நாளாக குறைந்த தங்கம் விலை- தொடர்ந்துசரிவு.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அனைத்து நாடுகளுக்கும் வரியை உயர்த்துவார் என கூறப்பட்ட நிலையில், அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவானது.இந்த நிலையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 

நேற்று (ஏப்ரல் 4) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,400க்கும், ஒரு சவரன் ரூ.67,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று (ஏப்ரல் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,310க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :  3வது நாளாக குறைந்த தங்கம் விலை- தொடர்ந்துசரிவு.

Share via