7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

by Staff / 23-12-2023 03:13:01pm
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via

More stories