முதல்வரோடு ஓபிஎஸ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ், அவரது உடல்நலனை விசாரிப்பதற்காக வருகை தந்ததாக கூறப்படுகிறது. இன்று (ஜூலை 31) மதியம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2-வது முறையாக ஓபிஎஸ், ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரே நாளில் இரண்டுகட்சித்தலைவர்கள் முதல்வரை சந்தித்துள்ளது திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags : முதல்வரோடு ஓபிஎஸ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.