காலி வாட்டர் பாட்டில்களை கொடுத்தால்  தண்ணீர் கொடுக்கும் மெஷின்

by Editor / 20-09-2021 04:41:34pm
காலி வாட்டர் பாட்டில்களை கொடுத்தால்  தண்ணீர் கொடுக்கும் மெஷின்


காலி வாட்டர் பாட்டில்களை கொடுத்தால் தண்ணீர் கொடுக்கும் மெஷினை மும்பை ஐஐடி மாணவர்களின் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைக்கு வெளியே செல்லும் நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லுவதில்லை. நமது தாகத்தை நினைத்த இடத்தில் தீர்க்கும் அளவிற்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படும் மினரல் வாட்டர் எங்கும் பெருகிவிட்டது. நாம் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்திய பின் அந்த பாட்டில்களை தூக்கி வீசி விடுகிறோம். அது குப்பையாக மாறி சுற்றுசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.


இதனை தடுக்கும் விதமாக மும்பை ஐஐடியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இருவர் புதிய மெஷின் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதில் நம்மிடம் இருக்கும் காலி பாட்டில்களை அந்த மெஷினிடம் கொடுத்தால் அது புதிய 300 மில்லிலிட்டர் அளவு கொண்ட தண்ணீர் பாட்டிலை தரும். இதன் மூலமாக மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை வீதியில் வீசாமல் இதில் போடுவார்கள். அதனால் சுற்றுசூழலை காக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த மாணவர்கள்.


இது குறித்து அவர்கள் கூறுகையில், “ இதனை உருவாக எங்களுக்கு 95 நாட்கள் ஆனது. இந்த கருவியில் மொத்தம் மூன்று கிடங்குகள் இருக்கும். ஓன்று பிளாஸ்டிக் குப்பைகளுக்கு. மற்றொன்று அலுமினியம் வகையான கழிவுகள், மற்றும் மூன்றாவது இதர வகையான கழிவுகளுக்காக இருக்கும்.”


இந்தக் கருவியில் ப்ளுடூத் மற்றும் வைபை வசதியும் இருக்கும். இதன் மூலமாக குப்பைகளை சேமிக்கும் அந்த கிடங்கு 80% நிறைந்ததும் அந்த மெசினை பராமரிக்கும் நபருக்கு தகவல் அனுப்பிவிடும். உடனே அந்த நபர் வந்து அதில் உள்ள கழிவுகளை அகற்றி விடுவார்.


இது தற்போது சோதனை முன்னோட்டமாக மும்பை ஐஐடி ஹாஸ்டலில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த மெசினை மும்பை மற்றும் சத்திஸ்கர் நகரங்களில் வைக்கப்படவுள்ளது. இந்த மெசின் உற்பத்தி செய்வதற்கு ரூ.50,000 முதல் ரூ. 1,00,000 வரை செலவாகும்.

 

Tags :

Share via