இரண்டு வீராங்கனைகளுக்கு அரசு வேலை கன்பார்ம்! முதல்வர் உத்தரவு!!

by Admin / 26-07-2021 03:25:30pm
இரண்டு வீராங்கனைகளுக்கு அரசு வேலை கன்பார்ம்! முதல்வர் உத்தரவு!!



டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் தனலட்சுமி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு தாயகம் திரும்பியதும் தமிழக முதலமைச்சர் அரசு பணிக்கான ஆணை வழங்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உற்சாகப்படுத்தும் வகையில் "வென்று வா  வீரர்களே" என்ற பாடலை முதலமைச்சர் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளதாகவும் 200 நாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள்  அனைவரும் சிறப்பான முறையில் போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறிய அவர்,தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும் என்றும், சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள் வீராங்கனைகளில் வறுமைக் கோட்டிற்குக்கு கீழே உள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via