முதலமைச்சர் மூலவர் துணை முதலமைச்சர் உற்சவர்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ந. புதூரில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடத்தை திறந்து வைத்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் டி கே எஸ் இளங்கோவன் மற்றும் ஆர்எஸ் பாரதி கலந்து கொள்கிறார்கள் மது ஒழிப்பு என்பது இந்தியா முழுவதும் வேண்டும் இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரும்போது தமிழகத்தில் கொண்டு வருவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது அருகில் பாண்டிச்சேரி கர்நாடகா கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் மதுவை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் மட்டும் மது ஒழிப்பு என்பது நடக்க முடியாத ஒரு செயல் ஏனென்றால் பக்கத்து இடங்களுக்கு சென்று மது குடித்து வருவார்கள் இல்லையென்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் காந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொல்லும் பாஜக ஆட்சி தான் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக இந்தியா முழுவதும் மது ஒழிப்பு கொண்டு வர வேண்டும் அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு அளிப்பார்.
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஏற்கனவே முதல்வர் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளார். மாற்றங்கள் எப்போதும் அரசியலில் இருக்கக்கூடிய ஒன்றுதான் அமைச்சரவை ஐந்து முறை மாறி இருக்கிறது. மாத மாதம் அமைச்சரவை மாற்றப்படவில்லை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எந்த அமைச்சர் எந்த பதவியில் இருக்கிறார் என்பதை பத்திரிக்கையை பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும் அல்லது தொலைக்காட்சிகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை அமைச்சர்கள் சுதந்திரமாக இருக்கலாம் சுதந்திரமாக செயல்படலாம் இதைத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வைத்திருக்கிறார்.
துணை முதல்வர் முதல்வருக்கு துணையாகவும் தமிழகத்தில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைந்து இருக்கிறதா என்பதை சரி பார்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றக் கூடிய வகையில் இருக்கும் துணை முதலமைச்சர் பணி பாராட்டத்தக்கதாக இருக்கும் வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராக வரவில்லை என்னுடைய பணிவின் காரணமாக வந்திருக்கிறேன் பொறுத்திருந்து பாருங்கள் நான் எப்படி எல்லாம் சிறப்பாக செயல்படுகிறேன் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள தக்க வகையில் துணை முதல்வராக செயல்படுவேன் என்று கூறியிருக்கிறார். முதலமைச்சர் மூலவர் துணை முதலமைச்சர் உற்சவர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சவுக்கு சங்கர் ஜாமீனில் வந்துள்ளார். திமுக மீதான விமர்சனங்களுக்காக சவுக்கு சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை திமுக மீது வைத்த விமர்சனங்களால் நான் உள்ளே சென்றேன் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள தக்கதாக இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.