சென்னையில் இன்று பிரம்மாண்டமான 4 வது மாரத்தான் ஓட்டம் நடந்தது.
சென்னையில் இன்று பிரம்மாண்டமான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. இது 14 வது தொடராகும். முழு மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலத்தில் அதிகாலை நாலு மணிக்கு தொடங்கியது. அரை மாரத்தான் ஓட்டம் காலை ஐந்து மணிக்கு எலியட்ஸ் கடற்கரையில் இருந்து தொடங்கியது.போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழு மாரத்தான் 42.195 கிலோமீட்டர், அரை மாரத்தான் 21.97 கிலோ மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். உடல் நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை தீவுத்திடல் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் போட்டிக்கு ஏதுவாக சென்னையில் மெட்ரோ ரயில் அதிகாலை 3.00 மணி முதல் இயக்கப்பட்டன.
முழு மாரத்தான் 20 மைல் மற்றும் அரைமார த்தான் போட்டிகள், கிழக்கு கடற்கரை சார்பில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்தது. 10 கிலோ மீட்டர் ஓட்டம் தரமணியில் உள்ள சி.பி.டி மைதானத்தில் முடிவடைந்தது.
Tags :















.jpg)


