சின்னமனூர் வாரசந்தை செயல்பட தொடங்கியது

தேனி மாவட்டம் சின்னமனூர் வாரசந்தை இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்றைய தினம் முதல் செயல்பட தொடங்கியது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சின்னமனூர் நிருவாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் வாரசந்தை இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் வாரசந்தை இயங்கும் என நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி வியாபாரிகள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட வேண்டும். சந்தைக்கு வரும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tags :