குழந்தையை கொன்று ஊராட்சி தலைவி தற்கொலை

கர்நாடகா: பவகடா கிராம பஞ்சாயத்து தலைவி ஸ்ருதி (34) தனது கணவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மகள் ரோஷிணி (4) ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே, கோபாலகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் தம்பதி இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்தது. இதனால் விரக்தியடைந்த ஸ்ருதி, ரோஷிணியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தார். அவர் எழுதியிருந்த கடிதத்தை வைத்து கோபாலகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரிக்கிறது.
Tags : குழந்தையை கொன்று ஊராட்சி தலைவி தற்கொலை