19 உயிர்களை குடித்த மெத்தனால் - தமிழக டிஜிபி

by Staff / 16-05-2023 04:56:17pm
19 உயிர்களை குடித்த மெத்தனால் - தமிழக டிஜிபி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கள்ளச்சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை டி.ஜி.பி, “மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்” என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo