கூரை இடிந்து விழுந்து 5 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் திங்கள்கிழமை எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. வீட்டின் கூரை பலகை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நௌபாடா பகுதியில் உள்ள பாஸ்கர் காலனியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்தது. ஏழு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் முதல் தளத்தில் உள்ள ஸ்லாப் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கட்டடத்தின் வலிமையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags :