பழம் பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது

இந்திய அளவில் கலை,இலக்கியம்,மருத்துவம்,சமூகசேவை,விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியஅரசு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கிறது.அந்த வகை
யில், இந்தாண்டு தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்படம்,இலக்கியம்,மருத்துவம் சார்ந்தவர்களுக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு கலைக்காகவும் இலக்கியத்திற்காக சிற்பி பாலசுப்பிரமணியனுக்கும் மருத்துவத்திற்காக வீராசாமிக்கும்சமூகசேவைக்காக தாமேதரனுக்கும் கலைக்காக ஏ.கே.சி நடராஜனுக்கும் முத்துக்கண்ணம்மாவிற்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :