தேவர் ஜெயந்தியன்று வருகிறார் பிரதமர் மோடி

by Staff / 11-10-2022 01:26:17pm
தேவர் ஜெயந்தியன்று வருகிறார் பிரதமர் மோடி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். இந்த ஆண்டு நடைபெறும் பசும்பொன் தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்திற்கு வருகிற 30-ந்தேதி வரும் பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Tags :

Share via