ரஷ்ய -இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி

உத்தரப்பிரதேசம் மாநில ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யேந்திர சிவல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இந்தியத் தூதரகத்தில் மல்டி டாஸ்கிங் பிரிவு அதிகாரியாக இருந்து வருகிறார். இவர் ரகசியமாக தகவல்களை திருடி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு வழங்கியது தெரியவந்தது..அதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.. விசாரணையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகள், இந்தியத் தூதரகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் பற்றிய முக்கியமான ரகசியத் தகவல்களைப் பெற்று ஐ.எஸ்.ஐக்கு அனுப்பி வைத்தாகவும் தெரிவித்துள்ளாராம்.
Tags :