டீச்சரை செருப்பால் அடித்த மாணவி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியையை அவரிடம் படிக்கும் மாணவி செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கல்லூரி வளாகத்தில் செல்போனில் பேசியுள்ளார். இதனைப் பார்த்த ஆசிரியை அதனை கண்டித்து, செல்போனை பிடுங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, தன்னுடைய செல்போனை கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுக்கவே, மாணவி தனது செருப்பை கழற்றி ஆசிரியையை அடித்துள்ளார்.
Tags :