எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை

by Staff / 24-09-2023 11:51:04am
எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனான மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது கூட்டணியை விட்டு முற்றிலும் வெளியேறுவதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து முடிவு எடுப்பார்.

 

Tags :

Share via