அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு என புகார்

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் தொட்டி உடைக்கப்பட்டு, அதில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த செயலுக்கு குடிபோதை ஆசாமிகள் தான் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :