ஒருவரையொருவர் குத்திக் கொன்ற நண்பர்கள்
டெல்லி திலக் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சண்டீப் மற்றும் அரிஃப். நெருங்கிய நண்பர்களான இவர்களுக்குள் கடந்த 12-ம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டு, மாறி மாறி ஒருவரையொருவர் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட பகை அல்லது பண பிரச்சினை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















