ஆட்டோ ரிக்ஷாவின் பேட்டரி வெடித்து பெண், 2 குழந்தைகள் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஆட்டோ ரிக்ஷாவின் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் பெண்ணும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநரான பெண்ணின் கணவர் இரண்டு பேட்டரிகளை வீட்டின் அறையில் வைத்து சார்ஜ் செய்துள்ளார். அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணும், குழந்தைகளும் பேட்டரி வெடித்து சிதறியதில் படுகாயமடைந்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் நடந்த போது கணவர் காலைக்கடன் கழிப்பதற்கான வெளியே சென்றுள்ளார். விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :