தான் கட்டிய தாலி கயிற்றால் மனைவியை கொன்ற கணவன்.

by Editor / 21-11-2022 11:11:54pm
தான் கட்டிய தாலி கயிற்றால் மனைவியை கொன்ற கணவன்.

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா (28). கருத்து வேறுபாட்டினால் கணவரை விட்டு பிரிந்து தாய் வீடான கதிர்வேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற 35 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், பவித்ராவும் ராஜாவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெரியபாளையம் அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கள்ளிக்குப்பத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பவித்ராவுக்கும் ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாட்டினால் தொடர்ந்து சண்டை நடந்துள்ளது. ஆத்திரமடைந்த ராஜா பவித்ராவை கொலை செய்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண் அழுகுரல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். பின்பு தலைமறைவான ராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo