தகாத வார்த்தையால் திட்டியதாக இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு உதவி காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தகாத வார்த்தைகளால் திட்டியதாக உயிரிழந்ததை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குகைநேல்லூரை சேர்ந்த சரத் என்ற இளைஞர் மீது மைனர் பெண்ணை கடத்திச்சென்ற வழக்கில் உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கை விசாரித்து வரும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரத் கடந்த 12ஆம் தேதி தீக்குளித்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
Tags :