தூத்துக்குடிநகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்.
தூத்துக்குடி: காரில் தவறவிட்ட வியாபாரி சகாய ஜெபஸ்டினின் கைப்பையை, இரவு ரோந்துப் பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் கண்டெடுத்துள்ளார். அதில் 2.75 சவரன் நகை, 110 கிராம் வெள்ளி, 400 ரூபாய் இருந்தன. மாணிக்கராஜ் அந்தப் பையை சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தார். பையில் இருந்த முகவரியின் அடிப்படையில் விசாரணை நடத்தி, ஜெபஸ்டினுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையம் வந்த அவரிடம் நகைப்பை ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாகச் செயல்பட்ட மாணிக்கராஜை போலீசார் பாராட்டினர்.
Tags : தூத்துக்குடிநகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்.



















